Home One Line P1 “இந்திய சமூகத்தினருக்கு உதவிகள் நேரடியாக வழங்கப்பட வேண்டும்!”- பேராசிரியர் டாக்டர் இராமசாமி

“இந்திய சமூகத்தினருக்கு உதவிகள் நேரடியாக வழங்கப்பட வேண்டும்!”- பேராசிரியர் டாக்டர் இராமசாமி

1164
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மித்ரா அமைப்பின் மூலம் இந்திய சமூகத்திற்கு குறிப்பாக பி40 பிரிவில் உள்ளவர்களுக்கு தலைவர்கள் மூலம் நிதி ஏன் ஒதுக்கப்படுகிறது என்றும், பொதுமக்களின் நலனுக்காக அரசியல் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிதி ஏன் அரசு சாரா அமைப்புகள் மூலம் செலுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான அமைப்புகள் இந்திய சமூகத்தில் உள்ள ஏழைகளின் நிலையில் அல்லது நலனில் எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளன என்று அவர் வினவி உள்ளார்.

“இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை தங்கள் சொந்த ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிறுவன செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பெரும்பகுதியைப் பயன்படுத்துகின்றன.” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தனியார் நிறுவனங்கள் மூலம் மறைமுகமாக சமூகத்திற்கு நிதி விநியோகிக்கும் நடைமுறை தேசிய முன்னணி அரசாங்கக் காலத்தில் நடந்தது என்று அவர் கூறினார். ஆயினும், அதே நடைமுறை தற்போது பக்காத்தான் ஹாராப்பான் ஆட்சியின் போதும் நடக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

அரசு சாரா அமைப்புகளுக்கு நிதியினை பங்கிட்டு கொடுத்து மக்களுக்கு சென்றடையும் முறையில் தவறில்லை, ஆயினும், இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆயிரக்கணக்கான ஏழை இந்தியர்களுக்கு நல்ல வேலை இல்லை. பொது மற்றும் தனியார் துறைகளில் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும் இந்த பிரச்சினைகளுக்கு அவர்களை குறை சொல்ல முடியாது. இந்த பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க மித்ரா அதன் சில நிதியைப் பயன்படுத்தலாம். ஆனால், ஆழமான பகுப்பாய்வு இல்லாதது, நிபுணர்களுடனான ஆலோசனை மற்றும் அரசியல் திறன்கள் ஆகியவை இதற்கு தடையாக உள்ளது.” என்று இராமசாமி தெரிவித்தார்.

புதிய கல்வி மற்றும் திறன்களைப் பின்தொடர்வதில் இந்திய ஏழை மாணவர்களுக்கு நிதி சிக்கல் ஒரு காரணமாக அமைகிறது.  ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர் எதிர்கால திசையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார். இம்மாணவர்களுக்கு நேரடியாக உதவக்கூடிய புதிய அமைப்பை பொறுப்புள்ளவர்கள் ஏன் உருவாக்கக்கூடாது என்று இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.