Home One Line P1 “புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஐஜிபியை விரைவில் சந்திப்பேன்!”- இந்திரா காந்தி

“புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஐஜிபியை விரைவில் சந்திப்பேன்!”- இந்திரா காந்தி

1029
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காணாமல் போன பிரசன்னா தீட்சாவின் தாயார் எம்.இந்திரா காந்தி, தனது மகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் விவகாரம் குறித்து காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோரை சந்திக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

காணாமற்போன குழந்தையை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இரட்டிப்பாகும் என்று காவல் துறைத் தலைவரின் வாக்குறுதியைத் தொடர்ந்து அவர் இம்முடிவினை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரசன்னா கடத்தப்பட்டபோது அவர் 11 மாத குழந்தையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ஹாமிட்டின் அர்ப்பணிப்பு முந்தைய காவல்துறைத் தலைவர்களால் வழங்கப்பட்ட சாக்குகளில் இருந்து ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றமாகும் என்று இந்திரா மலாய் மேய்லிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இறுதியாக ஐஜிபி ஒருவர் அப்படிச் சொன்னதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முந்தையவர்கள் என்னைப் புறக்கணித்து, சாக்குகளை மட்டுமே கொடுத்தார்கள். காவல்துறையிடமிருந்து எந்தவொரு கருத்தையும் பெறாத பத்து ஆண்டுகள் மிக நீண்டது. மிக விரைவில் காவல் துறைத் தலைவருடனான சந்திப்பைப் பெறுவேன் என்று நம்புகிறேன்,” என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.

இந்திரா காந்தி மகளின் தேடலுக்கு உதவ இந்திரா காந்தி கண்காணிப்பு குழு (இங்காட்) தனியார் புலனாய்வாளர்கள் குழுவை நியமித்துள்ளதாக கடந்த திங்களன்று செய்தி வெளியானது.