Home One Line P2 ஒசாமாவின் மகன் இறந்து விட்டார், அமெரிக்கா உறுதி!

ஒசாமாவின் மகன் இறந்து விட்டார், அமெரிக்கா உறுதி!

862
0
SHARE
Ad

வாஷிங்டன்: மறைந்த அல்-கய்டா தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா நம்புகிறது என்று அமெரிக்க அதிகாரி நேற்று புதன்கிழமை சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அவரது மரணத்தில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். ஆயினும், அது குறித்த மேல் விவரங்களை அவர் வழங்கவில்லை. அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு சமீபத்தில் கிடைத்ததாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரு அதிரடி நடவடிக்கையில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அல்கய்டா என்ற பயங்கரவாத குழுவில் வளர்ந்து வரும் தலைவராக இருக்கும் ஹாம்ஸாவை கைப்பற்றுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை, அவர் குறித்த தகவல்களுக்கு ஒரு மில்லியன் டாலர் வெகுமதியை வழங்க உள்ளதாகக் கூறியிருந்தது.