Home One Line P2 தாய்லாந்தில் 3 வெடிப்பு சம்பவங்களில் இருவர் காயம்!

தாய்லாந்தில் 3 வெடிப்பு சம்பவங்களில் இருவர் காயம்!

857
0
SHARE
Ad

பாங்காக்: தாய்லாந்து தலைநகரில் குறைந்தது மூன்று இடங்களில் சிறிய வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவங்களில் இரண்டு தெரு துப்புரவாளர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

சோங் நோன்சி பிடிஎஸ் ஸ்கைட்ரெய்ன் நிலையத்தில் காலை நேரத்தில் ஒரு வெடிப்பும், மற்றொன்று மத்திய பாங்காக்கில் உள்ள ராமா சாலையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ராமா சாலையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு பயன்படுத்தப்பட்டதாகவும், இரண்டு தெரு துப்புரவாளர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், பாங்காக்கின் வடக்கே உள்ள லாக்ஸி மாவட்டத்தில் உள்ள சாங் வட்டானாவில் உள்ள அரசு மாளிகைக்கு அருகிலும், துங் சாங் ஹாங்கிலும் மூன்று குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.

52-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.