Home One Line P1 இந்திய பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலம் முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகமாக்கப்படும்!

இந்திய பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலம் முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகமாக்கப்படும்!

715
0
SHARE
Ad

சென்னை: இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் மற்றும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் பி. இராமசாமி தலைமையிலான மலேசிய பேராளர்கள் குழுவினர் தமிழக சென்னை ஐடிசி கிராண்ட் சோலா தங்கும் விடுதியில் இந்தியாவின் பயண முகவர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பிற்கு பேராசிரியர் இராமசாமி தலைமை ஏற்றார்.

வரும் காலங்களில் பினாங்கு மாநிலத்திற்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியில் இந்த சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை தொடங்கிய இந்தியாவுக்கான இந்த பயணத்தின் போது புது டில்லி, பெங்களூரு, சேலம், மற்றும் சென்னையில் உள்ள இந்திய தலைவர்கள்வணிக குழுக்கள், மலேசிய தூதர்கள் மற்றும் மாணவர்களுடனான சந்திப்புக் கூட்டம் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.