ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் இந்தோனேசியாவின் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வரும் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறது. மேலும், இந்த சம்பவத்தின் ஆகக் கடைசி முன்னேற்றங்களை அவ்வப்போது கண்காணிக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
“மலேசியர்கள் அமைதியாக இருக்கவும். சமீபத்திய முன்னேற்றங்களை அறிய உள்ளூர் செய்திகளைப் பின்பற்றவும்” என்று ஓர் அறிக்கையின் வாயிலாக அது தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 9.35 மணிக்கு நில நடுக்கத்தைத் தொடந்து இந்தோனேசியா சுனாமி எச்சரிக்கையை நீக்கியுள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் ஜகார்த்தாவில் உள்ள தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.