Home One Line P1 புரோட்டோன்: ஏழு மாத விற்பனை வளர்ச்சியில் இரண்டாவது நிலைக்கு முன்னேற்றம்!

புரோட்டோன்: ஏழு மாத விற்பனை வளர்ச்சியில் இரண்டாவது நிலைக்கு முன்னேற்றம்!

984
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய வாகன சந்தையில் புரோட்டோன் சென்ற ஆண்டைக் காட்டிலும் கடந்த ஏழு மாத விற்பனையில் வளர்ச்சியைக் கண்டு இரண்டாவது இடத்தில் இடம் பெற்றுள்ளது.

ஏழு மாதங்களில் புரோட்டான் அதன் 52,269 கார்களை விற்றுள்ளது.  இது கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான முதல் ஏழு மாதங்களில் விற்ற கார்களைக் காட்டிலும் இது அதிகமானது. 2018-ஆம் ஆண்டு 35,561 கார்கள் மட்டுமே விற்கப்பட்டிருந்தன. தற்போது அதன் விற்பனை 47 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டிற்கான சந்தை பங்கு சுமார் 15 விழுக்காடு என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் 8,590 கார்களின் விற்பனையுடன், தேசிய கார் தயாரிப்பாளரான புரோட்டோன் வலுவான எண்ணிக்கையை தொடர்ந்து உருவாக்கி வருவதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான வரி விலக்கின் போது வலுவான விற்பனையின் தாக்கம், இவ்வாண்டின் ஜூலை மாதத்தில் காணப்படவில்லை. ஜூலை மாதத்தின் விற்பனை வளர்ச்சியானது, ஜூன் மாதத்தோடு ஒப்பிடும்போது குறைவாக உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

எக்ஸ்70 பிரீமியம் மற்றும் எக்ஸிகியூட்டிவ் ரகங்களின் விற்பனை வளர்ச்சியைக் காரணம் காட்டி,  எஸ்யூவி பிரிவுகளைத் தொடர்ந்து வழிநடத்துவதாக தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் பெர்சோனா மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஐரிஸ் காரும் மேம்பட்ட விற்பனையைக் கண்டுள்ளதாக புரோட்டோன் தெரிவித்தது.