Home One Line P0 அன்வார் அடுத்த பிரதமராக 197 பிகேஆர் தொகுதிகள் ஆதரவு

அன்வார் அடுத்த பிரதமராக 197 பிகேஆர் தொகுதிகள் ஆதரவு

684
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சிக்குள் தலைமைத்துவப் போராட்டங்கள், குழப்பங்கள் நீடிக்கின்றன என ஊடகத் தகவல்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அந்தக் கட்சியின் 197 தொகுதித் தலைவர்கள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.

நாடு முழுமையிலும் 219 தொகுதிகளைக் கொண்டிருக்கும் பிகேஆர் கட்சியின் 197 தொகுதிகள் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியிருப்பது கட்சி ரீதியாக அன்வார் இன்னும் வலிமை வாய்ந்தவராக இருப்பதையும் கட்சியின் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டியுள்ளது.