Home One Line P2 ஐபோன்கள் விற்பனை அமெரிக்காவில் 8 மில்லியன் வரை சரியலாம்

ஐபோன்கள் விற்பனை அமெரிக்காவில் 8 மில்லியன் வரை சரியலாம்

940
0
SHARE
Ad

வாஷிங்டன் – சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகக் கடைப்பிடித்தால் அதன் காரணமாக ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை கடுமையாக சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 மில்லியன் முதல் 8 மில்லியன் வரை எண்ணிக்கையில் ஐபோன்கள் விற்பனை அமெரிக்காவில் சரியலாம் என கருதப்படுகிறது.

சீனாவின் எஞ்சியுள்ள 300 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய சீனப் பொருட்கள் மீது 10 விழுக்காடு வரிவிதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை சரிந்து அதன் வருமான் 2020-இல் 4 விழுக்காடு வரை குறையலாம் என்றும் வணிக ஊடகங்கள் கணித்துள்ளன.

டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள், அமெரிக்கா – சீனா வணிகப் போர் ஆகிய அம்சங்கள் காரணமாக மோசமான வணிகச் சூழல் அமெரிக்காவின் தொழில் நுட்ப நிறுவனங்கள் குழுமியிருக்கும் சிலிக்கோன் வேலியினை கருமேகங்களாகச் சூழ்ந்திருக்கின்றன.

அமெரிக்கா – சீனா வணிகப் போராட்டத்தில் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 3 நாட்களில் 2 விழுக்காடு வரையில் குறைந்துள்ளன.