Home One Line P1 அயர்லாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை!

அயர்லாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை!

751
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிரம்பானில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையில் இருந்தபோது 15 வயதுடைய ஐரிஷ் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக மலேசிய காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கற்றல் குறைபாடுகள் உள்ள அச்சிறுமி குறித்த செய்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிபிசி செய்திப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

பந்தாய் ஹில்ஸில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து அச்சிறுமி காணாமல் போனது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நீலாய் மாவட்ட ஓசிபிடி முகமட் நோ மார்ஸுகி பெசார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“காவல் துறையின் தொடக்கக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களின் மூன்று குழந்தைகளுடன் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு தங்கும் விடுதியில் பதிவு செய்துள்ளனர். மறுநாள் காலை 8.30 மணியளவில் நோரா அன் என்ற 15 வயது சிறுமி அவரது அறையில் இருந்து காணவில்லை என்று குடும்பத்தினர் கண்டறிந்தனர்,” என்று அவர் கூறினார்.

காவல் துறையின் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இப்பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டது, ஆனால் அவர்கள் காணாமல் போன சிறுமியை கண்டறியவில்லை.

நாங்கள் தேடலைத் தொடர்கிறோம், மேலும் அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கும் இந்த விவகாரத்தில் உதவுமாறு நாங்கள் அறிவித்துள்ளோம்என்று மார்ஷுகி தெரிவித்ததாக டி ஸ்டார் நாளிதழ் தெரிவித்துள்ளது.