Home One Line P0 கூடாரப் பிரச்சனைக்காக ஆயுதம் ஏந்திய சண்டை, 16 பேர் கைது!

கூடாரப் பிரச்சனைக்காக ஆயுதம் ஏந்திய சண்டை, 16 பேர் கைது!

834
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை சுங்கை டாராவில் உள்ள காளியம்மன் கோயில் இரத ஊர்வலத்தின் போது இரு கும்பலுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஆயுதம் ஏந்திய சண்டையில் முடிவுற்றதால் 16 சந்தேக நபர்களை காவல் துறையினர் கைது செய்ததுடன் மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் போது ஒருவரின் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இரத ஊர்வலத்தின் போது இரு குழுக்களிடையே சண்டை வெடித்ததாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் மூத்த உதவி ஆணையர் பாட்ஸில் அகமட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இரவு 9.15 சம்பவத்தில் தொடர்புடைய கும்பல்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல் ஈடுபட்டுள்ளனர்.

ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, ​​கூடாரத்தை நிறுவுவது தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் வெடித்தது, இது கூர்மையான ஆயுதங்கள் ஏந்திய சண்டையுடன் முடிந்தது. மேலும், இந்த சம்பவத்தில் 34 வயதுடைய காவல் துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் காயமடைந்தார்என்று பாட்ஸில் கூறினார்.

16 சந்தேக நபர்களைத் தவிர, ஐந்து கூர்மையான ஆயுதங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.