கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான ஊழல் மற்றும் 1எம்டிபி நிதியிலிருந்து 2.28 பில்லியன் ரிங்கிட் நிதியை மோசடி செய்ததற்கான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க அரசு வழக்கறிஞர்கள் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் அளித்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஆகவே, நஜிப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணை அறிவிக்கப்பட்ட தேதியில், அதாவது ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும். மேலும், நடந்துக் கொண்டிருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான வழக்கு விசாரணை தேதிகளுடன் மோதக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்துல் ரஹ்மான் செப்லி தலைமையிலான மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், இவ்விரு வழக்குகளின் தேதிகள் ஒரே நாளில் மோதக்கூடும் நிலை ஏற்பட்டால் மட்டும், வழக்கினை ஒத்திவைக்க விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
தற்போது நடைபெற்று வரும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையை முகமட் நஸ்லான் முகமட் கசாலி விசாரித்து வருகிறார். இதற்கிடையில், 1எம்டிபி வழக்கு விசாரணை நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெராவால் கேட்கப்படும்.