Home One Line P1 ஜாவி எழுத்தழகியல்: நடைமுறை அறிவை வளர்க்கும் பாடங்களை அறிமுகம் செய்யுங்கள்!- சாயிட் இப்ராகிம்

ஜாவி எழுத்தழகியல்: நடைமுறை அறிவை வளர்க்கும் பாடங்களை அறிமுகம் செய்யுங்கள்!- சாயிட் இப்ராகிம்

928
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பள்ளியில் உள்ள நேரக்கட்டுப்பாட்டை நினைவில் வைத்துக் கொண்டு நடைமுறை அறிவைக் கற்றுக்கொள்ள அது பயன்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாயிட் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விசயங்கள் உள்ளன. அறிவின் பல்வேறு கிளைகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஏன் ஜாவி எழுத்தழகியலைக் கற்க வேண்டும்” என்று சாயிட் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான்காம் வகுப்பு மலாய் பாடப்புத்தகத்தில் ஜாவி எழுத்தழகியல் கலை மற்றும் இலக்கியம் குறித்த ஆறு பக்கங்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சின் முடிவு குறித்து நடந்து வரும் விவாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக சாயிட் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் இந்த நடவடிக்கை சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் இஸ்லாமியமயமாக்கலை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று கூறியிருந்தார்.

நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்கள் அவர்களை சிறப்பாக, தேசபக்தி உடையவர்கள் என்று கூறப்படுவதையும் விரும்புகிறவர்கள். மேலும், அவர்களின் கலாச்சார முன்னுரிமைகளையும் காட்ட விரும்புகிறார்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், ஜாவி எழுத்தழகியல் கலை மற்றும் இலக்கிய அறிமுகம் திட்டமிட்டபடி தொடரும் என்று வலியுறுத்தினார்.