Home One Line P2 துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மனநோய் காரணமா? டிரம்ப் மீது மக்கள் காட்டம்!

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மனநோய் காரணமா? டிரம்ப் மீது மக்கள் காட்டம்!

784
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் ஒகையோ மாகாணங்களில் நடந்த இரு வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரையிலும் 29 பேர் பலியாகி உள்ளனர்.

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெக்சாஸில் ஸ்பானிஷ் மக்கள் அதிகம் குடியேறுவதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அந்த 21 வயது வயது வெள்ளைக்கார இளைஞன், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 650 மைல்களுக்கு அப்பால் உள்ள டல்லாஸ் நகருக்கு அருகிலுள்ள எல்லென் என்ற ஊரைச் சேர்ந்தவராவார்.

#TamilSchoolmychoice

ஆனால் இந்த இருசம்பவங்களும் மனநோயால் நடந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

நடந்த இந்த இரு நிகழ்வுகளுக்கும் காரணம் மனநோய். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் மோசமான மனநோய் கொண்டவர்கள்என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், டிரம்பின் இந்த கருத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் நடந்து கொள்ளும் முறையும் துப்பாக்கி கட்டுப்பாட்டை அவர் கொண்டுவர மறுப்பது குறித்து அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.