Home One Line P1 வேலூர்: தொடர்ந்து திமுக 11,000-க்கும் மேலான வாக்குகளில் முன்னிலை!

வேலூர்: தொடர்ந்து திமுக 11,000-க்கும் மேலான வாக்குகளில் முன்னிலை!

711
0
SHARE
Ad

(மலேசிய நேரம் மதியம் 03:40 மணி நிலவரம்) சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. இதில் நீண்ட நேரமாக அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை இடம் பெற்றுள்ளார்.

முன்னதாக அதிமுகதிமுக வேட்பாளர்கள் இடையேயான வாக்கு வித்தியாசம் படிப்படியாக குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் படி அதிரடியாக திமுக முன்னிலையில் இடம் பெற்றது.

தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 391,579 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் 380, 032 வாக்குகளும் பெற்றுள்ளனர். சுமார் 11,547 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

#TamilSchoolmychoice

முன்னதாக சுமார் 11,000-க்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அதே போக்கினை திமுக தக்க வைத்து வருகிறது.