Home One Line P1 தேவைப்பட்டால் மத மாற்ற சட்டத் திருத்தம் மீண்டும் சட்டசபையில் ஆலோசிக்கப்படும்!

தேவைப்பட்டால் மத மாற்ற சட்டத் திருத்தம் மீண்டும் சட்டசபையில் ஆலோசிக்கப்படும்!

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 18 வயதிற்கு உட்பட்ட ஒருவர் ஒருதலைப்பட்ச ஒப்புதல் பெற்று இஸ்லாமிற்கு மாற அனுமதிக்கும் சிலாங்கூர் இஸ்லாமிய சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்கள் வரும் காலங்களில் மீண்டும் சிலாங்கூர் சட்டசபையில் தாக்கல் செய்யப்படலாம்.

ஆலோசிக்க வேண்டிய நியாயம் இருந்தால், நாங்கள் அதை எடுத்துக் கொள்வோம்என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இளைய வயதினர், இஸ்லாமிற்கு மாற வேண்டிய உண்மையின் விளக்கம் குறித்து தற்போது ஒரு சர்ச்சை நிலவி வருகிறது என்று அமிருடின் கூறினார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர், பினாங்கு மற்றும் சபா மட்டுமே இந்த விவகாரத்தில் தள்ளி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“ஆனால் இது ஒரு சிலரின் பார்வை மட்டுமே. வேறு பல கருத்துக்களும் உள்ளனஎன்று அவர் நேற்று இரவு வியாழக்கிழமை தெரிவித்தார்.

தற்போது, சிலாங்கூர் இஸ்லாமிய மத நிருவாகச் சட்டம் 18 வயதிற்கு உட்பட்ட ஒருவர் இஸ்லாமிற்கு மாறுவதற்கு முன்பு பெற்றோர்களின் (அப்பா மற்றும் அம்மா) அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகிறது.