Home One Line P1 மத மாற்றம் திருத்தம் சட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்கலாம்!

மத மாற்றம் திருத்தம் சட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்கலாம்!

651
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநில சட்டமன்றம் மாநிலத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை உள்ளடக்கிய ஒருதலைப்பட்ச மத மசோதாவின் முன்மொழிவை சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் முகமட் ஹானிப் காத்ரி அப்துல்லா கூறினார்.

அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையின் அடிப்படையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம் இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மட்டுமே கொண்டு, எந்தவொரு திருத்தத்தையும் முன்வைப்பதைத் தடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், அத்திருத்தம் அதிகார எல்லைக்கு வெளியே உள்ளதா இல்லையா என்பது யாரேனும் சட்டப்பூர்வமாக சவால் செய்ய விரும்பினால், பின்னர் நீதிமன்றத்தில் முடிவு செய்யட்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு முழுமையானது அல்ல மற்றும் அதை மீண்டும் நீதிமன்றத்தில் கொண்டு வந்தால் மாற்ற முடியாததும் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்..

கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த சிலாங்கூர் மாநில சட்டசபையில், 18 வயதிற்கு உட்பட்ட நபரை ஒருதலைப்பட்ச ஒப்புதலுடன் இஸ்லாமிற்கு மாற்ற அனுமதிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் திட்டமிட்டதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

தனது சொந்த அமைச்சரவை உட்பட பெரும்பான்மையான நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி அவர் அவ்வாறு செய்ய திட்டமிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அந்த மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் எங் சூ லிம் மறுத்ததைத் தொடர்ந்து இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.