சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம், தொடங்கப்படாமல் காலத் தாமதம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
புதிய பரிமாணத்தோடு இப்படம் மீண்டும் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தைத் தொடர்ந்து அவர் நடிகர் சிம்புவை வைத்து அரசியல் ரீதியிலான படம் ஒன்றை இயக்க உள்ளதாகக் கூறப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 25-ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் தொடங்க வேண்டியிருந்தது, ஆயினும் காலத் தாமதம் காரணமாக தற்போது சிம்பு படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.