Home One Line P1 “சிலாங்கூர் மாநில ஆட்சியில் குழப்பம் ஏதும் இல்லை!”- அமிருடின் ஷாரி

“சிலாங்கூர் மாநில ஆட்சியில் குழப்பம் ஏதும் இல்லை!”- அமிருடின் ஷாரி

658
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநில ஆட்சியில், செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டதைப் போல எந்தவொரு குழப்பமும் இல்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

சிறார்களின் மத மாற்றம் தொடர்பான அரசு சட்டத்தின் திருத்தம் குறித்து ஏற்பட்ட சலசலப்பு காரணமாக, சிலாங்கூர் அரசாங்கத்தின் தலைவர்கள் வெவ்வேறு குழுக்களாக பிரிந்திருப்பதாகக் கூறப்படுவது தவறு என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் நிருவாகத்தில் உடன்படாத சில விசயங்கள் இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட பல விவகாரங்கள் உள்ளன. இது எங்களின் ஒற்றுமையைக் குலைக்காது.என்று அவர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நான்கு சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் ஷாராபுடின் ஷாவை புக்கிட் காயாங்கான் அரண்மனையில் நேற்று காலை 11 மணிக்கு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.