Home One Line P1 மத மாற்றம் விவகாரம்: 4 சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுல்தானை சந்தித்தனர்!

மத மாற்றம் விவகாரம்: 4 சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுல்தானை சந்தித்தனர்!

941
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு முஸ்லிம் அல்லாத மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவுடன் சந்திப்பினை மேற்கொண்டனர்.

சிறுபான்மையினரை ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மாற்ற அனுமதிக்கும் வகையில் மாநில சட்டங்களை திருத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஜசெகவின் டெங் சாங் கிம், வி. கணபதிராவ், எங் ஜிசே ஹான் மற்றும் பிகேஆரின் ஹீ லோய் சியென் ஆகியோர் சுல்தானை சந்தித்ததாக நம்பப்படுகிறது.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி இவர்கள் நால்வரும் சுல்தானை சந்திப்பதற்குக் கோரியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் செய்தி குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த திருத்தத்தை சிலாங்கூர் இஸ்லாமிய குழு (மைஸ்) முன்மொழிந்ததாகவும், அரண்மனையின் ஆதரவைப் பெற்றதாகவும் அமிருடின் தங்களிடம் கூறியதாக நம்பத்தக ஆதாரம் மலேசியாகினியிடம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தத் திருத்தத்தை எதிர்த்ததாகவும், சுல்தானுக்கு தங்கள் நிலைப்பாட்டை விளக்குமாறு அமிருடினிடம் கேட்டதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுதான் முடிவு என்று கூறி இந்த விவகாரத்தை மீண்டும் அரண்மனைக்கு எடுத்துச் செல்ல அமிருடின் தயக்கம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அமிருடின் இன்று மாலை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலத் தலைவர்களை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.