Home One Line P1 அமெரிக்கா: நச்சை பயன்படுத்தி விலங்குகளைக் கொல்வது தொடரும்!

அமெரிக்கா: நச்சை பயன்படுத்தி விலங்குகளைக் கொல்வது தொடரும்!

920
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டு விலங்குகளை நச்சு வைத்துக் கொல்லும் வழக்கம் பலரின் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில், அந்த செயல்முறையை மேலும் துரிதப்படுத்த அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

குறிப்பாக ஆபத்தை விளைவிக்கும் ஓநாய்கள், நரிகள் மற்றும் நாய்களை நச்சு வெடிகளைப் (cyanide bomb) பயன்படுத்தி கொல்லும் நடைமுறையை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

விலங்குகளுக்கு பொறி வைத்து, ஏமாற்றி கூண்டிற்குள் பிடித்து, வாய்ப்பகுதியில் நஞ்சு தெளிக்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றன. ஆயினும், இதில் பிரச்சனையாக எழுந்துள்ள விவகாரம் என்னவெனில், விலங்குகளை பிடித்து நஞ்சை தெளித்து கொல்வதற்காக வைக்கப்படும் பொறிகளில் சில சமயங்களில் அபாயகரமற்ற விலங்குகளும், குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2017-இல் இது போன்ற பொறியில் சிக்கிய குழந்தை ஒன்றுக்கு தற்காலிக பார்வை இழப்பு ஏற்பட்டது. இது போன்ற விவகாரங்களில் அமெரிக்க அரசு அக்கறையின்மையுடன் செயல்படுவதை மக்கள் கண்டித்து வருகின்றனர்.