Home One Line P1 “ஏவுகணை” புகழ் விஷானுக்கு வேதமூர்த்தி பாராட்டு

“ஏவுகணை” புகழ் விஷானுக்கு வேதமூர்த்தி பாராட்டு

839
0
SHARE
Ad

புத்ராஜெயா – “ஏவுகணை” புகழ் இயந்திர பொறியியல் முதுகலை பட்டதாரி மாணவர் விஷானையும் அவரின் பெற்றோரையும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நேரில் தமது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியதோடு சிறப்பித்தும் மகிழ்ந்தார்.

சிறுவயது முதலே தொழில்நுட்ப ஆற்றலைக் கொண்டிருந்த விஷான், இங்கிலாந்து ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் முதுகலைப்பட்டக் கல்வியை மேற்கொண்டு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் நாள் பட்டம் பெற்றார்.

ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது புறப்பாட நடவடிக்கை மூலம் நோவா ரக ஏவுகணையைத் தயாரித்த பன்னாட்டு மாணவர் குழுவிற்கு தலைமையேற்று மலேசியப் பெருமையை நிலைநாட்டிய விஷான், தன் பெற்றோரான இரா.பிரகாசம்-அ.நிர்மலா இணையருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து இதே துறையில் முனைவர் பட்டம் பெற இருக்கும் விஷானை, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி பாராட்டினார்.