Home One Line P2 பிக் பாஸ் 3 : சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் 3 : சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்

942
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், சாக்‌ஷி அகர்வால் இரசிகர்களால் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்திலிருந்து மூன்று பேர் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அபிராமி, லோஸ்லியா மற்றும் சாக்‌ஷி ஆகியோரே அந்த மூவராவர்.

பொதுமக்கள் மத்தியில் எதிர்பாராதவிதமாக சரவணனுக்கு எதிராக மகளிர் அமைப்புகளில் இருந்து எழுந்த கண்டனங்கள் காரணமாக, அவர் பாதியிலேயே கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

கல்லூரி காலங்களில் நானும் பேருந்துகளில் பெண்களோடு உரசுவது போன்ற காரியங்களைச் செய்திருக்கிறேன் என சரவணன் கூறியது – அதை கமல்ஹாசன் கண்டிக்காதது – போன்ற அம்சங்கள் குறித்து, பாடகி சின்மயி போன்றவர்கள் சமூக ஊடகங்களில் கண்டனக் குரல்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து மகளிர் சிலர் ஸ்டார் விஜய் அலுவலகம் முன்பு திரண்டு தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திடீரென பாதியிலேயே சரவணன் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றுப்பட்டு விட்டதால் இந்த வாரம் வேறு யாரையும் வெளியேற்ற வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது.

இதற்கிடையில் வைல்ட் கார்டு எனப்படும் மக்கள் தேர்வு மூலம் நடிகை கஸ்தூரி 17ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

எனினும், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரான லோஸ்லியா காப்பாற்றப்படுவதாக கமல் முதலில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சாக்‌‌ஷி அகர்வால் வெளியேற்றப்படுவதாக அறிவித்த கமல்ஹாசன் பின்னர் மேடையில் சாக்‌ஷியை அழைத்து பங்கேற்பாளர்களுடன் உரையாட வைத்ததோடு, அவரது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.