Home One Line P1 “மலாய்க்காரர் அல்லாதவர்களுக்காக அக்காலத்தில் அரேபிய எழுத்து ரூமிக்கு மாற்றப்பட்டது!”- பிரதமர்

“மலாய்க்காரர் அல்லாதவர்களுக்காக அக்காலத்தில் அரேபிய எழுத்து ரூமிக்கு மாற்றப்பட்டது!”- பிரதமர்

1085
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த காலத்தில் மலாய்க்காரர்கள் அல்லாத சமூகத்தின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அரசாங்கம், மலாய் மொழியினை ஜாவியிலிருந்து ரூமிக்கு மாற்றியதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

தற்போது, அரசாங்கம் செயல்படுத்த விரும்பும் நான்காம் வகுப்பு மலாய் பாடப்புத்தகத்தில் மூன்று பக்கங்கள் கொண்ட அரேபிய வனப்பெழுத்து கற்றலைக் குறித்து மக்கள் இப்போது ஏன் வாதிடுகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் அறிவித்ததைப் போல, ஒரு சில மாற்றங்களுக்கிடையில், அரேபிய வனப்பெழுத்து கற்பித்தலை, ஆசிரியர்களே ஆய்வு நடத்தி நடத்தலாம் எனும் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னதாக, சீன கல்வியாளர் இயக்கமான டோங் சோங்கை இனவெறியர்கள் என்றும் பிரதமர் விமர்சித்திருந்தார்.

இஸ்லாமியமயமாக்கல் வடிவமாக பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்தை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை இரத்துச் செய்யக் கோரி, டோங் சோங் இரண்டு நாட்களுக்கு முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்த விவகாரம் மலாய்க்காரர்கள் அல்லாத பல சமூகங்களின் எதிர்ப்பை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.