Home One Line P1 டத்தோஸ்ரீ சரவணன் அத்தி வரதரை தரிசித்தார்

டத்தோஸ்ரீ சரவணன் அத்தி வரதரை தரிசித்தார்

971
0
SHARE
Ad

காஞ்சிபுரம் – கடந்த சில வாரங்களாக உலகம் எங்கும் உள்ள இந்துப் பக்தர்களை தன் வசம் இழுத்திருப்பது காஞ்சிபுரத்தின்  அத்திவரதரின் தரிசனம். அந்த வகையில் தற்போது தமிழக வருகை மேற்கொண்டிருக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் காஞ்சிபுரம் வருகை தந்து அத்திவரதரை தரிசித்தார்.

அத்திவரதர் தரிசனத்தில் அவருடன் சென்றிருந்த மலேசியக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

“ஒருவரின் வாழ்நாளில் அத்திவரதர் தரிசனம் அமைவது என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் காணக் கிடைக்காத பேறு. வாய்ப்பிருந்தால் அவசியம் கண்டு மகிழ வேண்டிய தரிசனம் அத்தி வரதரின் தரிசனம். அந்த வகையில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில் பெருமிதம் அடைகின்றேன். இறைவனுக்கு நன்றியும் கூறுகிறேன்” என அத்திவரதர் தரிசனத்திற்குப் பின் சரவணன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளருடன் சந்திப்பு

#TamilSchoolmychoice

அத்திவரதர் தரிசனத்திற்குப் பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்) பி.பொன்னையா (படம்) அவர்களையும் மரியாதை நிமித்தம் சந்தித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்த சரவணன், தமக்கும் தனது குழுவினருக்கும் சிறப்பான தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தமைக்கு தனது நன்றியையும் ஆட்சியாளருக்குத் தெரிவித்துக் கொண்டார்.