Home One Line P1 அருண் மகிழ்நனுக்கு சிங்கை அரசின் தேசிய தின பொதுச் சேவை விருது

அருண் மகிழ்நனுக்கு சிங்கை அரசின் தேசிய தின பொதுச் சேவை விருது

1409
0
SHARE
Ad

சிங்கப்பூர் – சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய நூலக வாரியத்தின் வரலாற்றில் முதன்முறையாக தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் ஆலோசனைக் குழுத் தலைவர் அருண் மகிழ்நனுக்கு தேசிய தினப் பொதுச் சேவை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் நீண்ட காலமாக அரசாங்க சேவைகளின் மூலமும் தனது தனிப்பட்ட உழைப்பின் மூலமும் பங்களிப்பை வழங்கி வந்திருப்பவர் அருண் மகிழ்நன்.

சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் இளைய சமுதாயம் பயனடையும் வகையிலும், வரலாற்றுப் பெட்டகமாகப் பதிவு செய்து பாதுகாக்கும் நோக்கிலும் மின்பதிப்புகளாக மாற்ற 2013-இல் சிங்கப்பூர் அரசாங்கம் தொடங்கிய திட்டத்தின் தலைவராக அருண் மகிழ்நன் பணியாற்றி வருகிறார்.

#TamilSchoolmychoice

தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் ஆலோசனைக் குழுத் தலைவர் பொறுப்பை ஏற்றதிலிருந்து அந்த நூலகத்தின் தமிழ் மொழிப் பிரிவை மேம்படுத்துவதில் பலமுனைகளிலும் அவர் தனது அறிவாற்றலை பங்களித்துள்ளார்.