Home One Line P1 ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

718
0
SHARE
Ad

ஹாங்காங்: ஹாங்காங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று அதன் நிருவாகம் தெரிவித்துள்ளது. ஆயினும், ஒரு சில விமான இயக்கங்கள் பாதிக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

பரவலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நேற்று திங்கட்கிழமை விமானங்களை நிறுத்த கட்டாயப்படுத்தியதாக சீனா அரசு குறிப்பிட்டிருந்தது.

உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தின் கைப்பேசி பயன்பாட்டில் இந்த அறிவிப்பு காலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

திங்களன்று விமான சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களே காரணம் என்று விமானம் நிலையம் குற்றம் சாட்டியது.

இதற்கிடையில், ஐந்து நாட்களாக வரவேற்பு பகுதியில் இருந்த போராட்டக்காரர்கள் கலைந்து செல்லத் தொடங்கியதாக ரோயட்டர்ஸ் குறிப்பிட்டது.

அவர்களில் பெரும்பாலோர் நள்ளிரவுக்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறினர் என்றும் செவ்வாய்க்கிழமை ஏறக்குறைய காலை சுமார் 50 போராட்டக்காரர்கள் மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.