Home One Line P1 1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க நஜிப் அளித்த இறுதி மேல்முறையீடு நிராகரிப்பு!

1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க நஜிப் அளித்த இறுதி மேல்முறையீடு நிராகரிப்பு!

619
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த திங்கட்கிழமை தொடங்க இருக்கும் 1எம்டிபி விசாரணையை ஒத்திவைக்க நஜிப் அப்துல் ரசாக் அளித்த இறுதி முறையீட்டை மத்திய நீதிமன்றம் ஏகமனதாக நிராகரித்துள்ளது.

இது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கு விசாரணை தேதிகளுடன் மோதும் என்று கணிக்கப்பட்டதால், நஜிப் இந்த முறையீட்டினை செய்திருந்தார். வருகிற வெள்ளிக்கிழமை அதன் இறுதி சாட்சியை அரசு தரப்பு விசாரித்து முடிக்கும் என்று எதிர்பார்க்கிறது.

இன்று செவ்வாய்க்கிழமை இது குறித்த தீர்ப்பில், தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியது.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் திங்களன்று சந்திக்கும் போது அரசு தரப்பினரும், நஜிப் தரப்பினரும், தேதிகள் அடிப்படையில் தேவையான விண்ணப்பங்களை  அளிக்க முடியும் என்று அது கூறியுள்ளது.

தீர்ப்பிற்கு முன்னதாகவே, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், அரசு தரப்பு சார்பாக மேல்முறையீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்றார். ஏனெனில், அவர்கள் எஸ்ஆர்சி விசாரணையை வார இறுதிக்குள் முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.