Home One Line P1 மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதர் காட்சியளிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை!

மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதர் காட்சியளிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை!

853
0
SHARE
Ad

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்துவரப்படும் அத்திவரதர் சிலை, 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும்

இந்நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை மீண்டும் வருகிற 17-ஆம் தேதி குளத்தில் வைக்கப்பட உள்ளது

#TamilSchoolmychoice

அத்திவரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் காஞ்சிபுரத்திற்கு வருவதாகக் கூறப்படுகிறது.  தரிசனத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால், தினமும் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, இன்னும் பலர் அத்திவரதரை தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது

இது தொடர்பாக வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.