Home One Line P1 “ஒரு சில இந்து குழுக்கள் என்னை தவறாக விமர்சிக்கிறார்கள்!”- ஜாகிர் நாயக்

“ஒரு சில இந்து குழுக்கள் என்னை தவறாக விமர்சிக்கிறார்கள்!”- ஜாகிர் நாயக்

844
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்துக்கள் குறித்து தாம் அண்மையில் கூறிய கருத்துக்கள் குறித்து, ஒரு சிலர் அவரை தவறாக விமர்சித்துள்ளதாக இந்திய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கு எதிரான விமர்சனங்கள் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார். தமது எதிர்ப்பாளர்கள் தம் கருத்துக்களை பயன்படுத்தி அரசியலாக்குவதற்கும், மலேசியர்களிடையே மத ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை விட 100 மடங்கு அதிக உரிமைகளை இங்கு வாழும் இந்தியர்கள் பெற்றிருந்தாலும், மலேசியாவிலுள்ள இந்துக்கள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை விட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக விசுவாசமுள்ளவர்கள் என்று அவர் கூறியதாகக் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

நான் கூறியது என்னவென்றால்,  சில இந்து குழுக்கள் மோடி அரசாங்கத்திடம் என்னை ஒப்படைக்கும் கோரிக்கையில், எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் அதை ஆதரிக்க விரும்பின. மேலும், இன்டர்போல், இந்திய நீதிமன்றம் மற்றும் மலேசிய அரசாங்கம் நிராகரித்திருந்தாலும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை நோக்கி வந்தன.” என்று தாம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்படுகிறார் என்றும், நிலைமையை நியாயமாக மதிப்பிடும் எவருக்கும் இது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ஜாகிர் கூறினார்.

அவரை கைது செய்வதற்கான முயற்சியில் தனது விமர்சகர்கள் அவரை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக அவர் கூறினார்.

ஆனால் மலேசிய நீதிமன்றம் உட்பட எந்தவொரு நியாயமான நீதிமன்றமும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஒருபோதும் உடன்படாதுஎன்று அவர் மேலும் கூறினார்.

“அதற்கு பதிலாக, இவர்கள்தான் பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் இன வெறுப்பை உருவாக்கியதற்காக குற்றம் சாட்டப்பட வேண்டும்” என்று அவர் குற்றம் சாட்டினார்.