Home One Line P1 வேதமூர்த்தி புதுடில்லி வருகை – மலேசியத் தூதரைச் சந்தித்தார்

வேதமூர்த்தி புதுடில்லி வருகை – மலேசியத் தூதரைச் சந்தித்தார்

1000
0
SHARE
Ad

புதுடில்லி: இந்தியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 14), இந்தியாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ ஹிடாயாட் அப்துல் ஹமிடியை சந்தித்துப் பேசினார்.

புதுடில்லி சாணக்கியாபுரியில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தில் இன்று புதன்கிழமை இந்திய நேரப்படி காலை 10:30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

குறிப்பாக தூதரக வரலாறு, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவு, கல்விச் சுழல் மற்றும் வாய்ப்பு, இரு நாடுகளுக்கிடையே மேம்பட்டுள்ள சுற்றுலாத் துறை குறித்த தகவல்கள் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான வணிகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தெல்லாம் அமைச்சருக்கு துணைத் தூதர் நோர் அஸ்ஸாம் முகமட் இட்ரிஸ் விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமுர்த்தி மேற்கொண்டுள்ள அதிகாரத்துவ பயணத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பின்போது, துணைத் தூதர் நோர் அஸ்ஸாம் முகமட் இட்ரிஸ், அதிகாரிகள் எஸ்ரல் உசைமி (பொருளாதாரப் பிரிவு), டாக்டர் அகமட் ஷாம் பஹாரின்(பாதுகாப்புப் பிரிவு), ரோஸ்மாடி முகமட் டோம்(குடிநுழைவு), ஆலோசகர் முகமட் ஹபிஸ் ஒத்மான், முதல் நிலை செயலாளர் இப்ராகிம் ஹெல்மி அப்துல்லா ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 14) மாலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியத்தை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சந்திக்கிறார். நாளை இந்தியாவின் 72-ஆவது சுதந்திர தினம் கொண்டாட இருக்கும் வேளையில் வேதமூர்த்தியின் வருகை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.