
சென்னை: கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் கலைமாமணி விருதானது திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியங்கள், இசை உட்பட கலை சார்ந்து இயங்கக்கூடிய சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து விருது நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையிலான விருதுகள் சுமார் 201 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய்சேதுபதி, சந்தானம், பிரியாமணி, கார்த்தி, நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர், திரைப்பட இயக்குநர் கலைஞானம், நடிகர் சசிகுமார், தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, பிரபுதேவா, இயக்குநர் பவித்ரன், விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, கானா பாலா, நடிகர் சரவணன், பொன்வண்ணன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னணி பாலகி மாலதி, நடிகை நளினி, நடிகர் பிரசன்னா, நடிகர், இயக்குநர் பாண்டியராஜன், குட்டி பத்மினி, பாண்டு, சித்ரா லட்சுமணன், கானா உலகநாதன், டி.பி கஜேந்திரன், ஜுடோ ரத்தினம் உட்பட இன்னும் பல கலைஞர்கள் இந்த விருதினைப் பெற்றார்கள்.