Home One Line P1 பாரதியார் கவிதையை மேற்கோளிட்டு வாழ்த்துக் கூறிய இந்தியக் குடியரசுத் தலைவர்!

பாரதியார் கவிதையை மேற்கோளிட்டு வாழ்த்துக் கூறிய இந்தியக் குடியரசுத் தலைவர்!

3103
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியத் தேசிய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றை தமிழிலிலே மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். அவரது உரை சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அறிவியல் வளர்ச்சி தொடர்பான கருத்துகளைப் பற்றி பேசுகையில், அவர் அப்பாடலை எடுத்துக் கூறியுள்ளார்.

“வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்றப் பாடலை அவர் மேற்கோளிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், அம்மாநிலங்கள் இனி முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். பிற மாநிலங்களில் வாழும் மக்களைப் போல, காஷ்மீர், ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் வாழும் மக்களும் எல்லா உரிமைகளையும் பெற இயலும் என்று அவர் கூறியுள்ளார்.