Home One Line P1 அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது!

அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது!

813
0
SHARE
Ad

சென்னை: காஞ்சிபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவுப் பெறுகிறது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வந்தது.

ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடைசி நாளான இன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலைக்குள் காஞ்சிபுரம் நகருக்குள் வரும் அனைவரும் அத்திவரதரை தரிசித்த பிறகே தரிசனம் நிறைவடையும் என மாவட்ட நிருவாகம் அறிவித்துள்ளது

தொடர்ந்து, நாளை 17-ஆம் தேதி அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என மாவட்ட நிருவாகம் அறிவித்துள்ளது.