Home One Line P1 சர்ச்சையை ஏற்படுத்த முயன்றதாக குலசேகரன், இராமசாமி உட்பட 5 பேர் மீது ஜாகிர் காவல் நிலையத்தில்...

சர்ச்சையை ஏற்படுத்த முயன்றதாக குலசேகரன், இராமசாமி உட்பட 5 பேர் மீது ஜாகிர் காவல் நிலையத்தில் புகார்!

865
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் இன்று வெள்ளிக்கிழமை மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மற்றும் இதர மூன்று பேருக்கு எதிராக காவல் துறையில் புகார் அறிக்கையை சமர்ப்பித்தார்.

கிள்ளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ் முனியாண்டி, மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் ஐந்து பேரும் தங்கள் அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளில் அவதூறாகப் பேசியுள்ளதாக ஜாகிர் குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

இந்த நாட்டு மக்கள் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த செய்தியை பரப்புகையில், எனது சொற்பொழிவின் உண்மையான அர்த்தம் குறித்து தவறான ஊடக அறிக்கையும், கட்டுரையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவை பொதுமக்களை தவறாக வழிநடத்தியது.”இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்என்ற தலைப்பில் எனது உரைக்குப் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததை அவர்கள் தவறாக மேற்கோள் காட்டினர். வெளிப்படையாக, அவர்கள் தங்கள் அரசியலுக்காக எனது அறிக்கைகளை திரித்துக் கையாளுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்து சிறுபான்மையினரை நடத்துவதிலும் அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும் இஸ்லாத்தின் உண்மையான வழியைக் கடைப்பிடித்ததற்காக மலேசியாவை அவர் உண்மையில் பாராட்டியதாக அவர் கூறினார். இந்த முறையை இந்திய அரசு செய்யத் தவறி விட்டது என்று அவர் கூறினார்.

இத்தகைய அவதூறான அறிக்கைகள், எனது நற்பெயர், நிலை மற்றும் நம்பகத்தன்மையை சேதப்படுத்துகின்றன. மேலும், முடிவில்லாத ஊழல், வெறுப்பு மற்றும் பொதுமக்களின் பார்வையில் அவமதிப்பு ஆகியவற்றுடன் என்னை இணைக்கின்றன. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், மலேசிய மக்களிடத்தில் அமைதியைக் குலைக்கிறது. மேலும், மலேசியர்களிடையே சண்டையைத் தூண்டி விடுகிறது,” என்று அவர் கூறினார்.