Home One Line P1 கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல் வெற்றி செல்லாது, மீண்டும் தேர்தல் நடக்க சாத்தியம்!

கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல் வெற்றி செல்லாது, மீண்டும் தேர்தல் நடக்க சாத்தியம்!

1143
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகளை தேர்தல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இரத்து செய்தது.

இதன் மூலமாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் அத்தொகுதியில் வென்றது ஏற்றுக் கொள்ளப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு வாக்குச் சாவடியில் 284 கூடுதல் வாக்குகள் முறையற்ற முறையில் பதிவாகியுள்ளதாகவும், 57 கூடுதல் வாக்குகள் மற்றொரு வாக்களிப்பு மையத்தில் முறையற்ற முறையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக நீதிபதி லீ ஹெங் சுங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கூடுதல் வாக்குச்சீட்டுகள் தேர்தல் முடிவை பாதித்ததாக தீர்ப்பளிக்கப்பட்டது.

எனவே, கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் இடைத் தேர்தல் நடக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தாங்கள் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அனிபாவின் வழக்கறிஞர் தெங்கு புவாட் அகமட்  தெரிவித்தார்.