கோலாலம்பூர்: அண்மையில் பரிதாபமான நிலையில் மரணமுற்ற அயர்லாந்தைச் சேர்ந்த சிறுமி நோரா அன் குடும்பத்தினரை துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்தார்.
இந்த சம்பவம் தம்மை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியதாக வான் அசிசா தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சருமான வான் அசிசா, இந்த சம்பவம் பற்றிய முழு விளக்கத்தை பெற்றார். இறந்தவரைக் கண்டுபிடிப்பதற்கான 10 நாட்கள் தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கையில் தாம் திருப்தி அடைந்ததாக வான் அஜிசா கூறினார்.
கற்றல் குறைபாடுகள் இருந்த நோராவின் உடல் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கும் விடுதியிலிருந்து சுமார் 2.5 கி.மீ தூரத்தில் உள்ள ஓர் ஓடையில் கண்டெடுக்கப்பட்டது.