Home One Line P1 நோரா அன் மரண விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படும்

நோரா அன் மரண விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படும்

553
0
SHARE
Ad

சிரம்பான்: சிரம்பான் மரண விசாரணை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தொடங்கி ஐரிஷ்-பிரெஞ்சு சிறுமி நோரா அன் குய்ரின் மரண விசாரணை தொடர்பான விசாரணை இயங்கலையில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மலேசிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகமான யூடியூப் முகநூல் பக்கமான, ‘தி மலேசியன் ஜுடிசுவரி’- யில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி இந்த விசாரணை ஒளிபரப்பப்படும் என்று புத்ராஜெயா கூட்டரசு பிரதேச நீதிமன்ற அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

“மலேசிய நீதித்துறை விசாரணையின் நேரடி ஒளிபரப்பை நடத்தும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆகஸ்டு 24 முதல் 28 வரை மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி, மைமூனா இரண்டு வாரங்களுக்கு இந்த விசாரணை நீடித்து, பின்பு, செப்டம்பர் 1 முதல் 4 வரை மீண்டும் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

விசாரணைக்கு உதவ சாட்சியம் அளிக்க மொத்தம் 64 சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13- ஆம் தேதி சிரம்பானில் உள்ள ஜாலான் பந்தாய் தங்கும் விடுதியிலிருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில், ஒரு சிற்றோடைக்கு அருகில் நோரா அன்னின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.