Home One Line P1 மஇகா தேமு, அம்னோ முடிவுடன் ஒத்து செயல்படும்

மஇகா தேமு, அம்னோ முடிவுடன் ஒத்து செயல்படும்

557
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி மற்றும் அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் வரை அக்கூட்டணியின் ஒரு பகுதியாக, கட்சி உறுதியுடன் இருக்கும் என்று  மஇகா தலைவர் எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“அடிமட்ட மட்டத்தில் அம்னோ தேசிய கூட்டணியில் இணையுமா அல்லது பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலில் இணையுமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

“மஇகாவைப் பொறுத்தவரை, தேசிய முன்னணி மற்றும் அம்னோ தேசிய கூட்டணியில் இருக்கும் வரை நாங்கள் அதற்கு ஆதரவுடன் இருப்போம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முவாபாக்காட் நேஷனல் அதிகாரப்பூர்வமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுவப்பட்டது.

முன்னதாக இன்று, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலில் இணைய கூட்டணி ஒப்புக் கொண்டதாகக் கூறினார். அம்னோ மற்றும் பாஸ் துணைத் தலைவர்கள் இணைந்து நடத்திய கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

அம்னோ தேசிய கூட்டணியில் இணையாது என்று சாஹிட்  முன்பு வலியுறுத்தியிருந்தார்.