கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறித்து கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, மூசா அமான் மற்றும் 32 பிற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்தனர்.
இது குறித்து வழக்கறிஞர் தெங்கு புவாட் அகமட் தெரிவித்தார்.
ஜூலை 30-ஆம் தேதி சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநர் முடிவு குறித்து நீதித்துறை மறுஆய்வு அனுமதி பெற 33 சட்டமன்ற உறுப்பினர்களின் விண்ணப்பத்தை நீதித்துறை ஆணையர் லியோனார்ட் டேவிட் ஷிம் இன்று நிராகரித்தார்.
“இருப்பினும், நீதிபதியின் முடிவுக்கு நாங்கள் உடன்படவில்லை – ஆலோசனை மற்றும் கோரிக்கை, இரு வெவ்வேறான விசயங்கள், நாங்கள் இதை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வோம். ஏனெனில், நாங்கள் கோரிக்கையையும் ஆலோசனையையும் ஒரே விஷயமாகக் காணவில்லை.
“இந்த போராட்டம் தொடர்கிறது. நாங்கள் இன்னும் கைவிடவில்லை. எனது வாடிக்கையாளரும் கைவிடவில்லை, “என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.