Home One Line P1 நஜிப், அன்வார், மொகிதின் நாட்டின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது- மகாதீர்

நஜிப், அன்வார், மொகிதின் நாட்டின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது- மகாதீர்

790
0
SHARE
Ad

கோலாலம்பூர்- பிரதமர் மொகிதின் யாசின், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அல்லது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோரால் மலேசியாவின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

ஒரு யூடியூப் நேர்காணலில் பேசிய அவர், இந்த மூன்று  தலைவர்களுக்கிடையில் நாட்டின் இறையாண்மையை வலுப்படுத்த முடியும் என்று தாம் யாரை நம்புவதாகக் கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

“யாருமில்லை” என்று அவர் ஒரு விரைவான பதிலைக்  கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய கூட்டணி ஆட்சிகளுக்கிடையில், வலுவான மற்றும் நியாயமான கூட்டணி அரசாங்கம் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “ஆரம்பக் கட்ட தேசிய முன்னணி” வலுவானது என்று கூறினார்.

அன்வாரின் நல்ல குணங்களை விவரிக்கக் கேட்டபோது, ​​அவர் இலட்சியமிக்கவர் என்று மகாதீர் கூறினார்.

“நான் அவரை ஏற்றுக்கொண்டேன். துணைப் பிரதமராக அமரச் செய்தேன். நான் பதவி விலகும் போது, ​​அவர் எனக்கு பதிலாக பதவி ஏற்பார்

“ஆனால், அதற்கு முன்னதாகவே, அவர் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டிய சம்பவங்கள் இருந்தன. அது அவரை பிரதமராக இருப்பதைத் தடுத்தது” என்று அவர் கூறினார்.

மகாதீர், நஜிப்பை ஒரு திறமையான தலைவர் என்றும் வர்ணித்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் பணத்தை வழங்குவதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்ற விதம் ஒரு தலைவருக்கு “பொருத்தமற்ற யோசனை” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மகாதீர் இளைஞர்களை நாட்டின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு மற்றும் உணர்திறன் கொண்டவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“நாட்டில் என்ன நடக்கிறது என்பது பின்னர் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து அவர்கள் அக்கறைக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.