Home One Line P1 நீதிமன்றத்தின் முடிவை ஷாபி அப்டால் வரவேற்றுள்ளார்

நீதிமன்றத்தின் முடிவை ஷாபி அப்டால் வரவேற்றுள்ளார்

465
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஆளுநரின் முடிவை எதிர்த்து டான்ஸ்ரீ மூசா அமான் தலைமையிலான 33 சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சி தொடர்பான உயர்நீதிமன்றத்தின் முடிவை முகமட் ஷாபி அப்டால் வரவேற்றுள்ளார்.

“மாநில அரசியலமைப்பின் கீழ் ஆளுநர் அரசியலமைப்பு அதிகாரங்களை செயல்படுத்தி உள்ளார்” என்று அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் மாநில அரசியலமைப்பில் உள்ளபடி ஆளுநர் கைகளில் மட்டுமே உள்ளது என்று ஷாபி கூறினார்.

#TamilSchoolmychoice

தேர்தலுக்குத் தயாராகி, கட்சி விட்டு கட்சி மாறுபவர்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கான நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் இதுவே நேரம் என்று அவர் கூறினார்.

ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க மாநில ஆளுநர் எடுத்த முடிவினை எதிர்த்து அண்மையில் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து நீதித்துறையின் மறுஆய்வு கோரிய முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் மற்றும் 32 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த அந்த விண்ணப்பத்தை கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

சரவாக் உயர்நீதிமன்ற நீதிபதி நீதி ஆணையர் லியோனார்ட் டேவிட் ஷிம் எடுத்த முடிவானது, செப்டம்பர் 26 நிர்ணயிக்கப்பட்ட சபா தேர்தலை நிறுத்த எந்தவொரு முயற்சிக்கும் இனி வழிவகுக்காது என்ற முடிவினை கொண்டு வருகிறது.