Home One Line P2 தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் தீ விபத்து, 9 பேர் சிக்கியதாகத் தகவல்

தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் தீ விபத்து, 9 பேர் சிக்கியதாகத் தகவல்

571
0
SHARE
Ad

தெலுங்கானா: நேற்றிரவு வியாழக்கிழமை (ஆகஸ்டு 20) தெலுங்கானாவில் நீர்மின் நிலைய ஆலைக்குள் உள்ள மின் நிலையங்களில் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மின் நிலையத்திற்குள் 9 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணி (இந்திய நேரப்படி ) அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை மீட்டுள்ளனர். மேலும், 9 பேர் மின்நிலையத்தின் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.