கோலாலம்பூர்: புக்கிட் அமான் துணை இயக்குநர் மியோர் பாரிடலாத்ராஷ் வாஹிட் பேராக் பி.கே.ஆர் தலைவரான பார்ஹாஷ் வாபா சால்வடாரின் உறவினர் எனும் குற்றச்சாட்டை குற்றவியல் புலனாய்வுத் துறை மறுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று புக்கிட் அமான் இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
பார்ஹாஷ் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.
“சமீபத்திய வழக்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் எடில் அஸிம் அபு அடாம் ஆகியோரின் வழக்கு சம்பந்தப்பட்டது என்றும் அதில் மியோர் பாரிடாலாத்ராஷ் விசாரணை அதிகாரி என்று அறிக்கை கூறியது
“காவல் துறை இக்குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறது. மியோர் பாரிடாலாத்ராஷ் பார்ஹாஷின் உறவினர் அல்ல என்றும், கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யானவை, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறானவை என்றும் வலியுறுத்த விரும்புகிறது” என்று கோலாலம்பூரில் ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.
பார்ஹாஷ் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளும் மியோர் பாரிடாலாத்ராஷால் ஒருபோதும் விசாரிக்கப்படவில்லை என்றும், அனைத்து விசாரணைகளும் பார்ஹாஷ் அல்லது அன்வார் ஆகியோரின் வழக்குகள் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவால் விசாரிக்கப்படுவதாகவும் ஹுசிர் கூறினார்.
“பாரிடாலாத்ராஷ் அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விசாரணைக்கும் முன்னும் பின்னும் பார்ஹாஷை சந்தித்ததில்லை” என்று அவர் கூறினார்.