Home One Line P1 சபா தேர்தலை நிறுத்தும் முயற்சியை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சபா தேர்தலை நிறுத்தும் முயற்சியை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

500
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க மாநில ஆளுநர் எடுத்த முடிவினை எதிர்த்து அண்மையில் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து நீதித்துறையின் மறுஆய்வு கோரிய முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் மற்றும் 32 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த விண்ணப்பத்தை கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

சரவாக் உயர்நீதிமன்ற நீதிபதி நீதி ஆணையர் லியோனார்ட் டேவிட் ஷிம் எடுத்த முடிவானது, செப்டம்பர் 26 நிர்ணயிக்கப்பட்ட சபா தேர்தலை நிறுத்த எந்தவொரு முயற்சிக்கும் இனி வழிவகுக்காது என்ற முடிவினை கொண்டு வருகிறது.