Home One Line P1 சத்தியப்பிரமாணம் குறித்து ரமேஷ் விசாரிக்கப்படுவார்

சத்தியப்பிரமாணம் குறித்து ரமேஷ் விசாரிக்கப்படுவார்

512
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சத்தியப்பிரமாண அறிக்கை குறித்த விசாரணைக்காக ரமேஷ் ராவ் மீண்டும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார்.

இந்த முறை, ஒரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் பாலியல் குற்றம் செய்ததாக வெளியான சத்தியப்பிரமாணம் குறித்து, வாக்குமூலத்தை வழங்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

தன்னார்வ தொண்டுத் தலைவரான அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்பதை புக்கிட் அமான் துணை இயக்குநர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“அவர் வரவழைக்கப்படுவார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்” என்று அவர் கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 பி- இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் “ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கும்” என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் 2013- ஆம் ஆண்டில் ஓர் அரசியல்வாதியுடன் நான்கு முறை பாலியல் உடலுறவில் ஈடுபட்ட ஒரு நபரின் வெளிப்படையான விவரங்களைக் கொண்ட ஒரு சத்தியப்பிரமாணம் வெளிவந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அந்த சத்தியப்பிரமாணத்தை வெளியிட்ட நபர் இந்த வாரம் ரமேஷுக்கு எதிராக ஓர் அறிக்கையை பதிவு செய்தார். ரமேஷ் இந்த குற்றச்சாட்டை முன்வைக்க பயன்படுத்திக் கொண்டதாகக் கூறினார்.

கடந்த வார இறுதியில் எதிர்க்கட்சி அரசியல்வாதி தொடர்பாக வெளியிடப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு சத்தியப்பிரமாண அறிக்கையை காவல் துறையினர் விசாரித்து வருவதாகக் கூறினர்.

சத்தியப்பிரமாணம் தயார் செய்த நபர் ஞாயிற்றுக்கிழமை மலேசியா டுடே வலைப்பதிவில் இந்த ஆவணத்தை வெளியிடப்பட்ட பின்னர்,  காவல் துறை புகார் அறிக்கையை பதிவு செய்ததாகக் கூறப்பட்டது.

இது குறித்து விசாரணை நடந்து வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் (விசாரணை மற்றும் சட்ட) மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் உறுதிப்படுத்தினார்.

அரசியல்வாதியுடன் உடலுறவு கொண்ட ஒவ்வொரு முறையும் தனக்கு 300 ரிங்கிட் ரொக்கம் வழங்கப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர் கூறியிருந்தார்.

அரசியல்வாதியின் வேண்டுகோளின் பேரில், அரசியல்வாதிக்கு ஒரு நண்பரையும் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்த சத்தியப்பிரமாணம் ஜூன் 29 தேதியிடப்பட்டதாகும்.