Home One Line P1 ஜாகிர் நாயக்கின் உரைக்கு கெடாவும் தடைவிதித்தது

ஜாகிர் நாயக்கின் உரைக்கு கெடாவும் தடைவிதித்தது

782
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கின் உரைகளுக்கு கெடா மாநிலமும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே, பெர்லிஸ் மாநிலம் இத்தகைய முடிவை எடுத்திருக்கும் நிலையில், ஜாகிர் நாயக்கின் உரைக்குத் தடை விதிக்கும் இரண்டாவது மாநிலமாக கெடா திகழ்கிறது.

சரவாக் மாநிலம், ஜாகிர் நாயக் தங்களின் மாநிலத்தில் நுழைவதற்கே தடைவிதித்து விட்டது.

ஜாகிர் கெடா மாநில எல்லைக்குள் தாராளமாக வரலாம், ஆனால் மாநிலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது என கெடா மாநில மதப் பிரிவுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் இஸ்மாயில் சாலே கூறியதாக சினார் ஹரியான் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

“மக்களிடையே அமைதியும் நல்லிணக்கமும்தான் இப்போது முக்கியம். எரியும் நெருப்பில் நாம் எண்ணெய் விடக் கூடாது. அப்படிச் செய்தால் மூண்டிருக்கும் தீ இன்னும் பெரிதாகும். ஒற்றுமை நிலைமை நெருக்கடிக்கு ஆளாவதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்” என இஸ்மாயில் சாலே மேலும் கூறினார்.

இதற்கிடையில் ஜாகிர் புக்கிட் அமான் காவல் துறையினரால் நாளை திங்கட்கிழமை தொடர்ந்து விசாரிக்கப்படுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.