Home One Line P1 ஜாகிர் நாயக் சரவாக் மாநிலத்திற்குள் நுழையத் தடை!

ஜாகிர் நாயக் சரவாக் மாநிலத்திற்குள் நுழையத் தடை!

989
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கை சரவாக் மாநிலத்திற்குள் நுழைய மாநில அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மாநில துணை முதலமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் மற்றும் மாநில உள்ளாட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சர் டத்தோ டாக்டர் சிம் குய் ஹியான் ஆகியோர் சின் சியூ நாளிதழிடம் இந்த விவகாரம் இன்று வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்ததை டி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.

ஜாகிரின் கூர்மையான தேசத்துரோகக் கருத்துக்கள், சரவாக்கின் பல்லின மற்றும் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அவரை மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் மாசிங் கூறினார்.