Home One Line P1 காஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்!

காஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்!

776
0
SHARE
Ad

புது டில்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக டி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி நீக்கியதன் தொடர்பில், முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

அதனை நல்லமுறையில் இந்திய அரசு வெற்றிகரமாக முடித்ததாகக் கூறப்படுகிறது.  காஷ்மீரை காரணம் காட்டி இந்தியாவுடன் பிரச்சனை செய்து வந்த பாகிஸ்தானுக்கு, மத்திய அரசின் நடவடிக்கை கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

இதனை தடுக்க ஐநா சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை எடுத்துச் சென்றனர். பாகிஸ்தானுக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தியாவின் சிறப்பான தூதரக நடவடிக்கைகளால் அனைதுலக அளவில் பாகிஸ்தான் நடத்தவிருந்த சதிகள் முறியடிக்கப்பட்டன

இந்நிலையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து முக்கியமாக பேசப்பட்டதாகவும், இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டி விடுவதாகவும், அது தெற்காசியப் பகுதிகளில் அமைதிக்கு நல்லதல்ல என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.