கோலாலம்பூர்: உத்துசான் மெலாயு பெர்ஹாட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை அம்னோ கண்டு காணாமல் இருக்காது என்றும், மிகப் பழமையான செய்தித்தாள் வெளியீட்டு நிறுவனத்தின் சிக்கலைத் தீர்க்க உதவும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
அம்னோ தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று செவ்வாய்க்கிழமை உத்துசான் மெலாயு இயக்குனர் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என்று அனுவார் தெரிவித்தார்.
ஊதியப் பிரச்சனை காரணமாக கோலாலம்பூரில் உள்ள அந்நிறுவனத்தின் அச்சிடும் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு முன் நேற்று திங்கட்கிழமை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர்.
உத்துசான் மலேசியா மற்றும் கோஸ்மோ வெளியீட்டை நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக நாளை புதன்கிழமையிலிருந்து நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.